Saturday, October 2, 2010


எங்கள் 25ஆவது திருமணநாள்

இந்த விழா எங்களுக்கு தெரியாமல் எனது நான்கு பிள்ளைகளும் தங்கள் பணத்தை செலவு செய்து எங்களுக்கு செய்த விழா
காலை நான் சமையலை முடித்து விட்டு நானும் கணவரும் கடைக்கு சென்றோம் வாரத்தில் ஒருநாள்தான் கடைக்கு சென்று ஓரவாரத்துக்கு உரிய உணவு பொருற்களை வாங்கி வந்து வீட்டில் வைத்தால் ஒருவாரம் நிம்மதியாக சமைத்து வைத்து விட்டு நான் வேலைக்கு செல்வோம் அடிக்கடி கடைக்கு செல்ல நேரம் இல்லை அதேபோல் அன்றும் சென்றுவிட்டோம். மதியம் 12 மணிக்கு சென்று மாலை 5 மணிக்கு வீடு திரும்பினோம் வீட்டுக்குள் நுழைந்தால் எங்களுக்கு இன்ப அதிர்சியாக இருந்தது என்ன செய்வது என்று தெரியாமல் அப்படியே காரை விட்டு இறங்காமல் இதிர்சியில் இருந்தோம்

வெளிய பந்தல் அழகான பலுன்கள கட்டப்படிருந்தது நிறைந்த உறவினர்கள் எல்லோரும் எங்களை வரவேற்க வாசலில் நின்றிருந்தார்கள்.
பிள்ளைகள் எங்கள் இருவரின் கண்களை கட்டி வீட்டுக்குள் அழைத்து சென்று கண்களை திநந்தாள் வீட்டின் அழங்காரங்கள் மேசையில் எங்கள்
உயரத்துக்துக்கு கேக் தாம்பளத்தட்டில் எனக்கு பட்டுசாறி கணவருக்கு வேட்டி கழுத்து மாழை மஞ்சல் குங்குமம் வைத்து நால்வரும் எங்கள் கையில் தந்து ஆசீர்வாதம் வாங்கி உடனே வெளிக்கிட்டு வரும் படி சொன்னார்கள் விதம் விதமான சிற்றுண்டி வகைகள் எல்லாம் நிறைந்திருந்தது உஙக எங்களுக்கு தெரியாமல் எங்கள் விழாவுக்குகுரிய ஆயத்தங்களை 2 மாதமாக தங்கள் படிப்பையும் பார்த்துக்கொண்டு ஒழுங்கு செய்திருக்கின்றார்கள். கேக் வெட்டி முடிந்ததும் மேதிரம் தந்தர்கள் பிள்ளைகள் இருவரும் மறாற்றி கொண்டோம்.
என் வாழ்வில் மறக்கமுடியாத. சந்தோசத்தை என் பிள்ளைகள் என் தாய் தந்தை போல் செய்தார்கள் என் பிள்ளைகளை தந்த இறைவனுக்கு என் நன்றிகள்
-------------
எனக்கு வந்த மடல்கள் கீழே
----------------
அன்பு சகோதரி
இனிய நல்வாழ்த்துகள்;நீவிர் பல்லாண்டு சீரும் சிறப்புடன் வாழ்க
அன்புடன்
செபரா

வெள்ளிவிழா திருமண நாள் வாழ்த்துகள்
வாழ்வில் அனைத்து இன்பங்களும் நலமும் பெற்று பல்லாண்டு இன்புற்று நீவீர் வாழ இறைவனை பிரார்த்திக்கின்றேன்

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
----------
வாழ்த்துகள் ராகினி. நேத்திக்குப் பேசும்போது சொல்லி இருந்திருக்கலாமே?? அதனால் பரவாயில்லை. எங்கள் இருவரின் வாழ்த்துகளும், ஆசிகளும். இன்று போல் என்றும் இதே நெஞ்சில் உரத்துடனும், நேர்மைத் திறத்துடனும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறோம்.

கீதா&சாம்பசிவம்
- Show quoted text -

அன்புள்ள கவிதை குயிலுக்கு ,
இனிய வெள்ளி விழா மண நாள் வாழ்த்துக்கள்.
அன்புடன்,
காயத்ரி பாலசுப்ரமணியன்.
,,,,,,
தம்பதிகள் நல்ல தேக சுகத்தோடும் பிறர்க்கே உதவும் சிந்தனையோடும் பல்லாண்டு வாழ்க என இந்த யோகி வாழ்த்துகின்றான்,
யோகியார்
அன்பு நண்பர்களே,


"கூடி நடந்து கொள்ள வேண்டும் கோபதாபம் தள்ள வேண்டும்
கோடிச் செம்பொன் குவிந்தாலும் குளிர்ந்த வார்த்தை சொல்ல வேண்டும்
நாடி மணந்த நாதனோடு நாரும் மலரும் போலக் கூடி
நல்லறமாகிய இல்லற வாழ்வினில் எல்லையில்லாத பேரின்பமடைந்திட


பொறுமை என்னும் நகையணிந்து பெருமை கொள்ள வேண்டும் பெண்கள்"


என்று ஔவையார் படத்துக்காக பாபநாசம் சிவன் அவர்கள் இயற்றிய பாடல் வரிகளுக்கிணங்கி தன் கணவரோடு நல்வாழ்வு வாழ்ந்து கொண்டு நான்கு பிள்ளைகளைப் பெற்று நற்கல்வி பயிற்றுவித்து ஆளாக்கியதுடன், கணவர் தெய்வ சோதனையால் கை எலும்பு முறிந்து நீண்ட நாட்கள் சிகிச்சை பெற்று ஓய்வெடுக்க வேண்டியிருந்த நிலையிலும் மனம் தளராது பொறுப்பு மிக்க இல்லத்தரசியாய் குடும்பத்தையும் பேணி, பணிக்குச் சென்று பொருளீட்டி குடும்பத்தைக் காக்க வருவாயும் ஈட்டி


தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகை சான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்


எனும் குறளுக்கு இலக்கணமாக வாழ்ந்து காட்டி


தங்கள் திருமணத்தின் வெள்ளி விழாவைக் கொண்டாடும் நமதருமைத் தோழி கவிதைக் குயில் அவர்களது 25ஆம் ஆண்டு திருமண விழா புகைப்படக் கண்காட்சியைக் காணத் தவறாதீர்கள்.
http://thirumanaphoto.blogspot.com/


அவருக்கு எனது இதயபூர்வமான நல்லாசிகள்.


ஆகிரா
----

அன்புள்ள மகள் கவிதைக்குயில் ராகினி அவர்களுக்கு

தங்களுடைய 25 ஆவது திருமண நாளுக்கு எங்களுடைய இனிய வாழ்த்துக்கள்

என்று மகிழ்வோடு தாங்களும் தங்கள் குடும்பமும் இருக்க எல்லாம் வல்ல இறைவனை
வேண்டுகிறேன்

அன்புடன்
தமிழ்த்தேனீ

,,,
அம்மாவை பிள்ளைகள் வாழ்த்தி வணங்குகிறோம்
thurai

அருமையான குழந்தைகள். பொறுப்பும் தெரிஞ்ச குழந்தைகள். பலலாண்டு வாழ வாழ்த்துகள்.
குழந்தைகளுக்கும் எங்கள் ஆசிகளைத் தெரிவிக்கவும்.


7 comments:

 1. அருமையான படங்கள். மீண்டும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 2. அன்பு சகோதரி ராகினி பாஸ்கரன் அவர்களே... உங்கள் 25 வது திருமண நாள் படங்கள் இன்று தான் பார்த்தேன்... வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. உங்களை யாரென்றும் தெரியாது, உங்களது நிகழ்ச்சியை கேட்டதும் இல்லை காரனம் நான் கனடாவிலை வசிக்கின்றேன்...இருப்பினும் இந்த பதிவு என் கண்ணிற்கு எட்டியதும் வாழ்த்தவேண்டும் என்ற எதிர்பார்ப்பு, அவா, ஆசை..
  வாழ்க..நீடூழி வாழ்க!!!

  ReplyDelete